Story 7 – Stupid Ramu – Good advising story

முட்டாள் ராமு

ஒரு ஊரில் பக்தி மிகுந்த ஒருவன் இருந்தான். அவன் பெயர் ராமு. அவன் மிகவும் சோம்பேறியானவன். அவன் ஒரு நாள் காட்டின் வழியே பயணம் செயும் பொழுது ஒரு நரியை பார்த்தான்; அந்த நரிக்கு இரண்டு கால்களும் இல்லை. அந்த நரியை பார்த்த அவனுக்கு ஒரு சந்தேகம், இந்த நரிக்கு இரண்டு கால்களுமே இல்லை, இது எப்படி வேட்டையாடி தன் பசியை போக்கிக் கொள்ளும் என்று யோசித்து கொண்டிருந்தாரன்.

அப்பொழுது அந்த பக்கம் ஒரு புலி ஒரு பெரிய மானை வேட்டையாடி அதை சாப்பிட்டது. சாப்பிட்ட மீதியை அங்கேயே போட்டுவிட்டு சென்றது. புலி போனதை அறிந்த நரி மெதுவாக நகர்ந்து வந்து மிச்சமிருந்த உணவை திருப்தியாக சாப்பிட்டு அங்கிருந்து சென்றது .

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ராமு ‘இரண்டு காலும் இழந்த ஒரு நரிக்கே கடவுள் சாப்பாடு கொடுக்கும்போது , தினமும் கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கும் நமக்கு சாப்பாடு தராமலா போய்விடுவார், அதுவும் நமக்கு கடவுள் பக்தி அதிகம் என்று எண்ணினான். அதன் பிறகு அவன் எங்கேயும் சென்று சாப்பாடு தேட போகாமல், கடவுள் நரியை போல் நமக்கும் சாப்பாடு கொடுப்பார் என்று கோயிலில் போய் படுத்து கிடந்தான்; சாப்பாடே கிடைத்த பாடில்லை. ஒரு நாள் இரவு நேரம் கோயிலில் யாருமே இல்லை. இவன் மெதுவாக கண்ணை திறந்து பார்த்து கடவுளே உனக்கு என் பக்தியில் நம்பிக்கை இல்லையா என்று புலம்பினான். அப்போது கடவுள் அவன் முன் தோன்றி முட்டாளே நீ பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது நரியிடம் இல்லை; புலியிடம் இருந்து. புலியைப் போல உழைத்து சாப்பிட்டு மிச்சப்பட்டதை இயலாதவங்களுக்கு தானமாக கொடு என்று சொல்லிவிட்டு மறைந்தார்.

கதையின் கருத்து

பாடம் கற்றுக் கொள்வது யாரிடம் என்பதை அறிந்து முடிவு செய்ய.