தவளையும் சுண்டெலியும் – Frog and the mouse

5
(5)

ஒரு ஊரில் ஒரு சுண்டெலியும், தவளையும் நண்பர்களாக வாழ்ந்து வந்தன.

தவலை தினமும் காலையில் சுண்டெலியை பார்த்து வர தனது குளத்திலிருந்து வெலி வந்து சுண்டெலியின் வீட்டிர்கு செல்லும்.  தினமும் மதியம் போல் வீட்டிற்குத் திரும்பும்.

சுண்டெலி தவளையின் நட்பு கிடைத்தது எண்ணி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் தவளைக்கு எலி நாளடைவில் எதிரியாகக் தெரிந்தது ஏனென்றால் “எலி ஒரு நாளும் தன் வீட்டிற்கு வரவில்லை நான் மட்டும் தினமும் எலியின்  வீட்டிற்கு வந்து செல்கிறேன்” என்று எண்ணியது

ஒரு நாள் அந்த தவளை தான் அவமானத்திற்கு ஆளாகியது போல் உணர்ந்தது.

ஆகையால் சுண்டெலியை விட்டு விலகிச் செல்ல முடிவு செய்தது.

அதற்கு முன் எப்படியாவது இந்த சுண்டெலியை பழிதீர்க்க வேண்டும் என்று எண்ணி ஒரு கயிற்றின் ஒரு முனையை தனது சொந்தக் காலில் கட்டி, மறு முனையை எலியின் வாலில் கட்டி குளத்தில் குதித்து சுண்டெலியை பின்னால் இழுத்துச் சென்றது.

தவளை சுண்டெலியை  குளத்தில் ஆழமாக இழுத்து சென்றது.

சுண்டெலி தன்னை விடுவிக்க முயன்றது, ஆனால் முடியாமல் குளத்தில் மூழ்கி இறந்து விட்டது. இறந்த சுண்டெலியின் உடல் குலத்தில் மிதந்தது.

ஒரு பருந்து சுண்டெலி குளத்தின் மேற்பரப்பில் மிதப்பதைக் கண்டது. உடனே கீழே இறங்கி தன் கால்களால்  சுண்டெலியை பிடித்து, அருகிலுள்ள ஒரு மரத்தின் கிளைக்கு கொண்டு சென்றது.

எலி வாலில் கட்டப்பட்டு இருந்த கயிறு தவளையின் கால்களில் கட்டியிருந்ததால். தவளையும் எலி உடன் சேர்ந்து பருந்திடம் மாட்டிக்கொண்டது தவளை பருந்திடமிருந்து தப்பிக்க எவ்வளவு முயன்றது.

ஆனால் தவளையால் தப்பிக்க முடியவில்லை. பருந்து தவளையை  கொத்தித் தின்றது.

இந்த கதையின் மூலம் நாம் அறிய வேண்டியது என்னவென்றால்

உங்கள் எதிரிக்கு ஆழமான குழி தோண்டினால் அதில் நீங்களே விழ நேர்ந்திடும்’.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.